Connect with us

உள்நாட்டு செய்தி

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Published

on

வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30 முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மும்பையில் இது குறித்து நடைபெற்ற யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

எங்கள் கோரிக்கைகளுக்கு இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து இது வரையிலும் எந்த பதிலும் வராததால், நாங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கவும், அதாவது ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாவது,வாரத்தில் ஐந்து நாட்கள் பணி, ஓய்வூதியம் புதுப்பித்தல், எஞ்சிய பிரச்னைகள், தேசிய ஓய்வூதிய முறையை ரத்து செய்தல், ஊதிய உயர்வு கோரிக்கைகள் மீதான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்குதல், போதுமான ஆட்சேர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்றார்.