உள்நாட்டு செய்தி
சிறைத் தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் தலைமை அதிகாரி குசும்தாச மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (11) உறுதி செய்துள்ளது.இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 2018 மே மாதம் பிரதிவாதிகளான குசும்தாச மஹானாம மற்றும் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்குத் தாக்கல் செய்தது.அந்தக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்ட குசும்தாச மஹானாமவுக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனையும், 65,000 ரூபா அபராதமும் விதித்து மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட பியதாச திஸாநாயக்கவுக்கு 12 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது