உள்நாட்டு செய்தி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பிணை மனு நிராகரிக்கப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அன்று சதி மற்றும் கொலை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நவ்ஃபர் மவ்லவி உட்பட 25 பிரதிவாதிகளின் பிணை கோரிக்கையை நிராகரிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தமித் தோட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வேளையில் பிரதிவாதிகளை பிணையில் விடுவிப்பது பொருத்தமற்றது என நீதிவான் தமித் தோட்டவத்த இந்த உத்தரவை அறிவித்தார். அதன்படி, கோரிக்கைகளை நிராகரிக்கிறோம் என்று நீதிபதி குறிப்பிட்டார். அதனையடுத்து வழக்கை மீண்டும் பெப்ரவரி 01ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.