உள்நாட்டு செய்தி
எரிபொருளுக்கு பாரிய வரி”‘எரிபொருள் விலை மீள உயர்வு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் கடன் தொகையான 2758 மில்லியன் டொலர்களை ஈடுசெய்யும் வகையில் வருமானத்தை பெருக்கும் நோக்கில் எரிபொருளுக்கான தற்போதைய வரி விகிதங்களை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொருட்களுக்கும் தற்போதுள்ள வரி மட்டத்தில் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும் 25 ரூபா வரி சேர்க்கப்பட்டுள்ளது. வரி அதிகரிப்புடன் அனைத்து எரிபொருள் வகைகளின் விலையும் ஒரு லீற்றருக்கு குறைந்தது 25 ரூபாவினால் அதிகரிக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், புதிய வரி விகிதங்களை கருத்தில் கொண்டு, எரிபொருள் விலை சூத்திரத்தின்படி விலைகள் திருத்தம் செய்யப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய வரி எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே.