உள்நாட்டு செய்தி
மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் ஆதரவு இல்லை, மானியங்களுக்கும் பூட்டு..- IMF
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக கடன் மறுசீரமைப்புக்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மானியம் இல்லாமல் சேவைகளை வழங்குவதற்கான கட்டணத்தை வசூலிக்க நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், எனவே இதற்குப் பிறகு மானியம் பெறப்படாது என்றும் அவர் கூறினார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கடமையில்லா வர்த்தக நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கடன் மறுசீரமைப்பு எளிதானது அல்ல. அவர்களின் நிபந்தனைகளுக்கு நாம் அடிபணிய வேண்டும். இல்லையெனில், கடன் வழங்கப்படாது. சர்வதேச ஆதரவு இல்லை. சேவைகளை வழங்குவதற்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இனி மானியங்கள் இல்லை. மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும். கடன் அதிகமாக இருக்கும் வரை மறுசீரமைப்பு செய்யப்படாது. புதிய கடன் வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.