உலகம்
டிரம்பை முடக்கியது டுவிட்டர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.
வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்டதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏனைய சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட யூடியூப் நிறுவனமும் டிரம்புக்கு தடை விதித்துள்ளது.
எனினும் டுவிட்டர் கணக்கிற்கு மாற்றீடாக புதிய கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்படும் எனவும், டுவிட்டர் நிறுவனத்தின் செயற்பாடு தமது கருத்து சுதந்திரத்தை மீறும் வகையில் உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.