உலகம்
“TWITTER”ஐ பயன்படுத்த எதிர்காலத்தில் கட்டணம்
வர்த்தக மற்றும் அரச நடவடிக்கைகளுக்காக TWITTER சமூக வலையமைப்பை பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் கட்டணமொன்றை அறவிட டெஸ்லா நிறுவனத்தின் பிரதானி எலான் மஸ்க் தீர்மானித்துள்ளார்.
டுவிட்டர் எலான் மஸ்க் வசம் ஆனதில் இருந்து தொடர்ந்து டுவிட்டரை வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்த முடியுமா என பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
“சாதாரண பயனர்கள் தொடர்ந்து எப்போதும் டுவிட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் வணிக மற்றும் அரசாங்க பயனர்களுக்கு சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும் ” என பதிவிட்டுள்ளார்.