உள்நாட்டு செய்தி
கல்வித் துறை தொடர்பான முக்கியமான கருத்துக்களை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்டியாஸ்.
கல்வித் துறை தொடர்பான விடயங்களை முன்வைக்கும் போது குறுகிய அரசியல் நோக்கங்களைத் தவிர்த்து செயற்படுவது அவசியமாகுமென பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.அதே போல்,நாட்டிலும் உலகிலும் மாறிவரும் தொழிற் சந்தைக்கு ஏற்ப, நவீன உலகிற்குத் தேவையான புதிய பாடங்களையும் புதிய தொழில்நுட்ப பரப்பிலான அறிவையும் இளைய தலைமுறைக்குக் கொடுக்கும் வகையில் கல்விக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவது பெரும் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று(01) கலந்து கொண்டு உரையாற்றும் போதே இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.