உள்நாட்டு செய்தி
இன்றைய மின்வெட்டு விபரம்
நாடளாவிய ரீதியில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு காலை வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
மேலும், A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை மின் வெட்டு தொடரும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.
தெற்கு மற்றும் எல்ல சுற்றுலா வலயங்களுக்கு டிசம்பர் 1 ஆம் திகதி முதல் 1 மணித்தியால இரவு நேர மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 15 ஆம் திகதி நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் 3 வது மின்பிறப்பாக்கியை தேசிய மின்வட்டத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலம் அனைத்து சுற்றுலா வலயங்களுக்கும், இரவு வேளைகளில் மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாடளாவிய ரீதியில் இரவு நேர மின்வெட்டு 1 மணி நேரம் குறைக்கப்படும் என்றும்
தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.