Connect with us

உள்நாட்டு செய்தி

இரட்டைக் குடியுரிமை தொடர்பில் புதிய சட்டங்கள்.

Published

on

இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் உட்பட பல பிரிவுகளின் விசா கட்டணங்களை டிசம்பர் 1ஆம் தேதி திருத்தியமைக்க குடிவரவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்ட முன்மொழிவின் பிரகாரம் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, இரட்டைக் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் 2,000 அமெரிக்க டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், இரட்டைக் குடியுரிமை விண்ணப்பதாரரின் 22 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டணம் 500 டொலர்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களின் நகல் வழங்குவதற்கான கட்டணம் ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.