Connect with us

உள்நாட்டு செய்தி

மனித உரிமையின் போர்வையில் இனி அராஜகங்களுக்கு இடமில்லை.

Published

on

மனித உரிமைகள் என்ற போர்வையில் வன்முறை மற்றும் அராஜகத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, எந்தவொரு தரப்பினரும் இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டால் பாதுகாப்பு தரப்பினர் அதனை முற்றாக அடக்கிவிடுவார்கள் என தெரிவித்தார்.
மனித உரிமைகள் தொடர்பில் சிலர் வெளியிட்ட கருத்துக்கள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டார்.
எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஜனாதிபதியும் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவருகளும் விவாதத்தில் கலந்துகொண்டனர்.