உள்நாட்டு செய்தி
திரிபோஷ தயாரிக்க கொடுக்கப்படாத இரண்டு கப்பல்கள் சோளம் பிரபல அரசியல்வாதியின் மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு. .?
எடை குறைந்த குழந்தைகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொடுப்பதற்காக திரிபோஷை உற்பத்தி செய்ய முடியாத அரசாங்கம் சோளம் அடங்கிய இரண்டு கப்பல்களை மது உற்பத்திக்காக வழங்கியுள்ளதாக வான்கார்ட் சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் எடைக்குறைவான குழந்தைகளின் போசாக்கு தேவைகள் பாரியளவில் சவாலுக்கு உள்ளாகி போசாக்கின்மை அதிகரித்து வரும் நிலையில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்த இரண்டு சோளக்கப்பல்களை முன்னாள் அமைச்சர் ஒருவரின் நிறுவனமொன்றிற்கு மது உற்பத்திக்காக வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
மக்கள் மற்றும் நாட்டின் முன்னுரிமைத் தேவைகளை அங்கீகரிக்க முடியாத சோக நிலையை அரசாங்கம் அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணைய செனலொன்றுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.