உள்நாட்டு செய்தி
ஜப்பான் அரசு இளைஞர், யுவதிகளின் வளர்ச்சியில் துணை நிற்கும் – இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்
ஜப்பானில் தாதி, நலன் பேணல், தானியங்கி இயந்திர வல்லுநர் மற்றும் ஏனைய துறைகளில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது.
உங்களுக்கு அந்த திறன்கள் காணப்படுமாயின், ஜப்பான் மொழித் திறன் இருக்குமாயின், ஜப்பானில் பணியாற்றுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றது என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்தார்.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி உள்ளிட்ட குழுவினர் நேற்று (02) இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் சந்திப்புக்களை மேற்கொண்டார்.
சந்திப்பின் பின் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜப்பான் தூதுவர் இவ்வாறு தெரிவித்தார்.