அத்தியாவசிய மற்றும் அவசரகால சுகாதார சேவைகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் 38 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து...
ஜப்பானில் தாதி, நலன் பேணல், தானியங்கி இயந்திர வல்லுநர் மற்றும் ஏனைய துறைகளில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. உங்களுக்கு அந்த திறன்கள் காணப்படுமாயின், ஜப்பான் மொழித் திறன் இருக்குமாயின், ஜப்பானில் பணியாற்றுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றது என...
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் நேற்று (10) கைச்சாத்திடப்பட்டது. சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர். அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி ஆகியோர்...
இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினருடன் நடைபெறும் மாநாட்டின் போது இணை தலைமைத்துவம் வகிப்பது தொடர்பில் இன்னும் இணக்கப்பாட்டிற்கு வரவில்லை என ஜப்பான் கூறுவதாக Rauters செய்தி வௌியிட்டுள்ளது. ஜப்பான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி...
இலங்கையில் ஊட்டச்சத்து தேவையுடைய குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக ஜப்பானிய அரசாங்கம் UNICEF க்கு 500,000 டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய தயாராக இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. மற்ற கடன் வழங்கும் நாடுகளான சீனா மற்றும் இந்தியாவும் இந்த சிக்கலை தீர்க்க தலையிட வேண்டும்...
மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (27) டோக்கியோவிலுள்ள நிப்பொன் புடோக்கனில் (Nippon Budokan) அரச மரியாதையுடன் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கலந்து இறுதி அஞ்சலி...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெற்றுள்ளது....
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (25) இரவு ஜப்பான் செல்லவுள்ளார். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்....
இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை துஷ்பிரயோகம் செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளதால், ஜப்பானால் இலங்கைக்கு தற்போது உதவ முடியாது என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கூறியதாக பரவிவரும் செய்திகள் தொடர்பில் கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி...