உள்நாட்டு செய்தி
மேலதிக வகுப்புகள் ஆரம்பிக்கப்படுவது எப்போது?

பாடசாலைகள் ஆரம்பித்தவுடன் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரி டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் சுகாதார நலநன உறுதி செய்து தொற்று ஏற்படாத வகையில் மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதே நோக்கம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.