உள்நாட்டு செய்தி
தாமரைக் கோபுரம் இன்று திறப்பு

தாமரைக் கோபுரம் இன்று(15) முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது.
சுமார் 113 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கட்டப்பட்ட தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி நிறைவடைந்தது.
இதனை பார்வையிடுவதற்காக சாதாரண கட்டணம் 500 ரூபா அறவிடப்படவுள்ளதுடன் வெளிநாட்டவர்களுக்கு 20 அமெரிக்க டொலர்கள் கட்டணமாக அறவிடப்படவுள்ளது