Connect with us

உள்நாட்டு செய்தி

தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை நாளை ஆரம்பிக்க திட்டம்

Published

on

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை நாளை (15) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி நிறைவடைந்துள்ளதுடன், அதற்காக சீன நிறுவனம் வழங்கிய கடனை செலுத்தும் பணியை 2024 ஆம் ஆண்டு நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தாமரை கோபுர முதலீட்டில் இதுவரை உள்நாட்டு முதலீட்டாளர்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இணைந்துள்ளதுடன் 22 முதலீட்டாளர்கள் ஒப்பந்தத்தில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் 15 வெவ்வேறு நிகழ்வுகளுக்கான முன்பதிவுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை முதல் தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படவுள்ள நிலையில், 500 ரூபா மற்றும் 2000 ரூபா கட்டணத்தில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு உள்ளே செல்ல முடியும்.

வெளிநாட்டவர்களுக்கு டிக்கெட் கட்டணம் 20 அமெரிக்க டொலர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.