உள்நாட்டு செய்தி
எதிர்வரும் 19ஆம் திகதி அரச விசேட விடுமுறை

எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை அரச விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி, எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டில் தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அன்றைய தினம் விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும் வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை எனவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.