உள்நாட்டு செய்தி
மட்டக்குளி பகுதியில் துப்பாக்கிச் சூடு

நேற்று இரவு மட்டக்குளி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
26 வயதான ரணவக்க ஆராச்சிலாகே ஹசித சதுரங்க என அழைக்கப்படும் “அலிவத்தே ஹசித” என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் தொடர்பில் ஏற்பட்ட தகராறே துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மட்டக்குளிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.