Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 164 பேருக்கு கொவிட்

Published

on

மேலும் 164 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 668,827 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 6 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தினார்.

அவர்களுள் 30 வயதிற்கு குறைந்த பெண் ஒருவரும் 30 முதல் 59 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்ட 4 பெண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.