உள்நாட்டு செய்தி
741 சிசு செரிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்
மாணவர்களுக்காக நாளை(15) முதல் ‘சிசு செரிய’ உள்ளிட்ட அனைத்து பஸ்களும் திட்டமிட்ட நேர அட்டவணையின் பிரகாரம் சேவையில் ஈடுபடுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
சுமார் 741 சிசு செரிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.
எந்தவொரு சிக்கலும் இன்றி, மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்குத் தேவையான பஸ் சேவைகளை அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கி முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.