உள்நாட்டு செய்தி
மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசு உதயமாக வேண்டும்
” இன, மத சாயமற்ற – மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசு உதயமாக வேண்டும். ஊழல் அற்ற ஒருவர் அரச தலைவராக வேண்டும். அதற்கான சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அட்டனில் இன்று (11.07.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.