உள்நாட்டு செய்தி
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தற்போது ஒவ்வொரு மூன்று, நான்கு நாட்களுக்கு ஒரு கொவிட் மரணம் பதிவாகுவதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (சுகாதார சேவைகள்) ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று காரணமாக ஆபத்தான நிலையில் உள்ள பல நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் சிலர் குணமடைந்து வருவதாகவும் சிலர் ஆபத்தான நிலையில் இறக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த மாதத்திற்குள் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி மற்றும் நான்காவது பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால்,தடுப்பூசியை ஏற்றிக்கொள்வோர் இன்னும் ஆறு மாதங்களுக்கு வைரஸிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.