உள்நாட்டு செய்தி
எரிபொருளை ஏற்றிச் சென்ற புகையிரதம் தடம் புரண்டுள்ளது

ரம்புக்கனையில் இருந்து பேராதனை நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற புகையிரதம் ஒன்று, ரம்புக்கன – கன்சல பகுதியில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக ரம்புக்கனைக்கும் கண்டிக்கும் இடையிலான புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதுடன், பல புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்போது, புகையிரதத்திற்கோ, அதில் கொண்டு செல்லப்படும் எரிபொருளுக்கோ எவ்வித ஆபத்தும் இல்லை எனவும், இராணுவம் மற்றும் விமானப்படையினர் பாதுகாப்பு வழங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.