Sports
கேப்டன் பொறுப்பை மீண்டும் டோனியிடம் ஒப்படைக்கிறார் ஜடேஜா

CSK கேப்டன் பொறுப்பை மீண்டும் டோனியிடம் ஒப்படைக்க ஜடேஜா தீர்மானித்துள்ளார்.
கேப்டன் பதவியை ஏற்க டோனியும் சம்மதித்துள்ளார்.
இது தொடர்பாக சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு:
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டன் பதவியை மீண்டும் எம்.எஸ்.டோனியிடம் ஒப்படைக்கிறார் ஜடேஜா. அவர் தனது ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தவும், சி.எஸ்.கே. அணியை வழிநடத்தவும் டோனியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜடேஜா தனது விளையாட்டில் கவனம் செலுத்த அனுமதிக்கும் வகையில் அணியை வழிநடத்த டோனி ஒப்புக்கொண்டார்.
CSK இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சென்னை அணி, புள்ளி பட்டியலில் 9ம் இடத்தில் உள்ளமை குறிப்பிடதக்கது.