உள்நாட்டு செய்தி
எரிவாயு தட்டுப்பாடு அடுத்த மாத இறுதிக்குள் முடிவுக்கு வரும்

எரிவாயு தட்டுப்பாடு அடுத்த மாத இறுதிக்குள் முடிவுக்கு வரும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் லிட்ரோ மற்றும் லாவ்ப் நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவி வழங்குவதாக கூறியுள்ளது. இந்திய அரசின் தலையீட்டுடன் மேலும் பல விநியோகஸ்தர்களை தெரிவு செய்ய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
அத்துடன், எரிவாயு கொள்வனவுக்காக உலக வங்கி 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.