Connect with us

உலகம்

உலக அளவில் கொரோனா பாதிப்பு குறைந்தது: WHO

Published

on

உலக அளவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக அளவில் ஏப்ரல் 11 முதல் 17 திகதி வரையிலான ஒரு வார கால கொரோனா நிலவரம் குறித்த அறிக்கையை, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஒரு வார காலத்தில் 55 லட்சத்து 90 ஆயிரம் பேரை கொரோனா பாதித்துள்ளதாகவும், இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 17.24 சதவீதம் வீழ்ச்சி எனவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவால், ஒரு வார காலத்தில் 18 ஆயிரத்து 215 பேர் பலியாகி இருப்பதாகவும், இது முந்தைய வாரத்தைக் காட்டிலும் 21 சதவீதம் குறைவு எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

எல்லா பிராந்தியங்களிலும் கொரோனா தொற்று குறைந்துள்ளது.

பல நாடுகள் தங்கள் கொரோனா பரிசோதனை உத்திகளை படிப்படியாக மாற்றுவதால், இந்த போக்கு எச்சரிக்கையுடன் பார்க்கப்பட வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.