உள்நாட்டு செய்தி
“இயேசு உயிர்தெழுந்தார்”
கிறிஸ்தவர்கள் இன்று (17) பாஸ்கு எனப்படும் கிறிஸ்து இயேசுவின் உயர்ப்பை கொண்டாடுகின்றனர்.
கடந்த 15 ஆம் திகதி பெரிய வெள்ளியை அதாவது கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை கிஸ்தவர்கள் அனுஸ்டித்தனர்.
அதன்படி இன்று மூன்றாம் நாளில் இயேசு உயிர்தெழுந்ததை நினைவுக்கூர்ந்து கிறிஸ்தவர்கள் உயர்ப்பு பெரு விழாவை கொண்டாடுகின்றனர்.
இதேவேளை கடந்த 2019 ஆம் ஆண்டில் இது போன்ற தொரு நாளில் 3 தேவாலயங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த தாக்குதல்களில் திருப்பலி ஆராதனைகளில் பங்கேற்றிருந்த சுமார் 269 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தமை குறிப்பிடதக்கது.