உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் நிதியமைச்சர் அலி சாரிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரவித்துள்ளது.
இதன்போது மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடி நிலைமை தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.