உள்நாட்டு செய்தி
எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின் இல்லையாம்

தமிழ், சிங்களப் புத்தாண்டு தினங்களான ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின் துண்டிப்பை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகள் விடுமுறை தினங்கள் என்பதனால் அந்த இரண்டு தினங்களிலும் மின்சாரப் பயன்பாடு குறைவாகவே காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தி நிலையங்களில் போதுமான அளவு எரிபொருள் இருந்தால், மின் துண்டிப்பை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.