உள்நாட்டு செய்தி
மருதனார்மடம் சந்தை கொவிட் கொத்தணி உயர்வு

யாழ்.மருதனார்மடம் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் 4 கொவிட் தொற்றாளர்கள் இன்று (15) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
உடுவிலை சேர்ந்த இருவருக்கும், சன்டிலிப்பாயை சேர்ந்த ஒருவருக்கும், தெல்லிப்பழையை சேர்ந்த ஒருவருக்குமாக 4 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
Continue Reading