உள்நாட்டு செய்தி
அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் வேண்டும் – விக்கி
தமிழர்கள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாராந்த கேள்வி பதில் அறிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மாற்றுவதே தனது கடமையும், பொறுப்பும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.