உலகம்
“புடின் ஒரு போர்க்குற்றவாளி” : பைடன்

ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடினை ஒரு போர்க்குற்றவாளி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில் பைடனின் மேற்படி கருத்து வெளியாகியுள்ளது.
புடின் உக்ரைனில் பயங்கரமான பேரழிவையும் திகிலையும் ஏற்படுத்தியுள்ளார்.
மகப்பேறு மருத்துவமனைகளையும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் குண்டுவீசி தாக்கி வருகிறார்.
இவை அனைத்தும் அட்டூழியங்கள் என்று பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, புடினை ஒரு ‘கொலையாளி’ என்று பைடன் கூறியிருந்தார்.