உள்நாட்டு செய்தி
12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள்,உபகரணங்கள் அன்பளிப்பு
12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்த அமைப்புகள் மற்றும் முகவர் நிறுவனங்களுடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, Heart to Heart International, Hope Worldwide, மற்றும் Americares ஆகிய நிறுவனங்களுக்கு தனது நன்றிகளையும் அவர் தெரிவித்தார்.