உலகம்
சீனாவில் புதிதாக 200 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 125 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், 75 பேர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,09,526 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக உள்ளது.