உலகம்
“ரஸ்யா உக்ரைன் மீது நாளை படையெடுக்க வாய்ப்புள்ளது”
ரஸ்யா உக்ரைன் மீது நாளை (16) படையெடுக்க வாய்ப்புள்ளது என சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் எல்லையையொட்டிய தனது எல்லைப் பகுதியான பெலாரஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் ஏறக்குறைய 1 இலட்சம் வீரர்களை நிறுத்தி இருந்த ரஸ்யா தற்போது அந்த எண்ணிக்கையை 1.30 இலட்சமாக உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனின் உத்தரவின் பேரில் 3000 அமெரிக்க இராணுவத்தினர் உக்ரைன் எல்லையில் இருந்து 100கிமீ தொலைவில் போலாந்து எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் போர் தொடுக்கும் பட்சத்தில், ரஸ்யாவுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா, நேட்டோ படைகளும் தயாராக உள்ளன.
இதனால், 3 ஆம் உலகப் போர் மூளும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.