Sports
இன்று பெங்களூருவில் IPL கிரிக்கெட் வீரர்கள் ஏலம்

இரண்டு நாள் IPL கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது.
இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன.
10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர்.
ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டவர் உள்பட 25 வீரர்களை வைத்துக் கொள்ளலாம்.
இதன்படி பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகிறது. இவர்களை தேர்வு செய்ய ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது.
ஏலப்பட்டியலில் 370 இந்தியர், 220 வெளிநாட்டவர் என்று மொத்தம் 590 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இலங்கையின் ஹசரங்கா, இங்கிலாந்தின் லிவிங்ஸ்டன், தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் உள்பட 34 வீரர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முதல் நாளில் 161 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள்.
இங்கிலாந்தை சோ்ந்த ஹியூக் எட்மீட்ஸ் ஏலத்தை நடத்துகிறார்.