உள்நாட்டு செய்தி
எமக்கு எதிராக பிரச்சாரம்- மாவை

13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து தமிழ் மக்களை குழப்புவதற்காக பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு நேற்று (28) யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.
இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.