Connect with us

உள்நாட்டு செய்தி

இன்றைய தினம் மின்வெட்டு?

Published

on

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுமார் ஒரு மணிநேர மின் வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக சபை கூறுகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள களனிதிஸ்ஸ மின்உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வரும் வகையில், இந்த மின் வெட்டை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுவதாகவும் சபை குறிப்பிடுகின்றது.