உள்நாட்டு செய்தி
சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சு பதவி பறிப்பு
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சு பதவி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சரான அவர் பதவி வகித்தமை குறிப்பிடதக்கது.