நாட்டில் கொவிட் 19 தொற்றால் மேலும் அறுவர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது.
முஸ்லிம் மக்கள் தமது மத கோட்பாடுகளுக்கு அமைய கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை புதைப்பதற்கு இடமளிக்காமை அடிப்படை உரிமை மீறலாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு, தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில்...
மேல் மாகாணத்திலிருந்து வௌியேறுவோருக்கு மேற்கொள்ளப்படும் Antigen பரிசோதனை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளனர். மேல் மாகாணத்திலிருந்து வௌி மாவட்டங்களுக்கு செல்வோரால்...
முல்லைத்தீவு – வவுனிக்குளத்துக்குள் இன்று (19) மாலை கெப் வாகனம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மகேந்திரா ரக வாகனமே இவ்வாறு விபததுக்குள்ளாகியுள்ளது.
நாட்டில் மேலும் 495 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
MCC ஒப்பந்தத்தில் கைத்சாத்திட போவதில்லை என அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கினிகத்தென பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ” கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கும் தீர்மானத்திற்கு அமையவே மாகாண சபை...
மட்டக்களப்பு மாவட்டத்தின் மீராவோடை பிரதேசத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். உழவு இயந்திரம் மீராவோடை பகுதியில் இருந்து கறுவாக்கேணி நோக்கி சென்று கொண்டிருந்த...
தற்போதைய நிலைமை கருத்தில் கொண்டு நாட்டில் எந்தவேளையிலும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதியை மேற்கோள் காட்டி citizen.lk இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
நேற்றைய (18) தொற்றாளர்கள் – 662மொத்த தொற்றாளர்கள் – 36,049நேற்றைய உயிரிழப்பு – 05மொத்த உயிரிழப்பு – 165பேலியகொட, மினுவாங்கொட தொத்தணி – 32,380சிகிச்சையில் – 8,823குணமடைந்தோர் – 27,061யாழ்.மருதனார்மடம் சந்தை கொத்தணி – 77
மேல் மாகாண பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை முடிவெடுக்கப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய முடிவு எடுக்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.