நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற்கொண்டு நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மாலை 3 மணி வரை மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய (19) தொற்றாளர்கள் – 618மொத்த தொற்றாளர்கள் – 36,667நேற்றைய உயிரிழப்பு – 06மொத்த உயிரிழப்பு – 171குணமடைந்தோர் – 27,552
கொவிட் எச்சரிக்கை காரணமாக காலி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என தென்மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார். காலி மாவட்ட கொவிட் குழுக் கூட்டத்தின்போது...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.66 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5.37 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் கொவிட் 19 வைரஸ் தொற்றால் இதுவரை 16.91 இலட்சத்துக்கும்...
முல்லைத்தீவு – வவுனிக்குளத்தில் கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இரண்டு வயது சிறுமி உள்ளிட்ட 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கொவிட் 19 தொற்றால் மேலும் அறுவர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது.
முஸ்லிம் மக்கள் தமது மத கோட்பாடுகளுக்கு அமைய கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை புதைப்பதற்கு இடமளிக்காமை அடிப்படை உரிமை மீறலாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு, தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில்...
மேல் மாகாணத்திலிருந்து வௌியேறுவோருக்கு மேற்கொள்ளப்படும் Antigen பரிசோதனை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளனர். மேல் மாகாணத்திலிருந்து வௌி மாவட்டங்களுக்கு செல்வோரால்...
முல்லைத்தீவு – வவுனிக்குளத்துக்குள் இன்று (19) மாலை கெப் வாகனம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மகேந்திரா ரக வாகனமே இவ்வாறு விபததுக்குள்ளாகியுள்ளது.
நாட்டில் மேலும் 495 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.