பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த நியமனமானது ICC டT20 உலக கிண்ணத்தொடர் நிறைவடையும் வரை...
நாட்டில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் 425.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி...
வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீதேறி கைதிகள் சிலர் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது. போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களே எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டி இன்று சவுத்தெம்டன் நகர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கிடையில் ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு T20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது....
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.11 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.57 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39.24 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
செப்டேம்பர் முடியும் போது 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். “உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதித்த...
தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பெருமளவானோருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 63 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 6 மணிவரை 63 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,...
மட்டக்களப்பு, செங்கலடி கறுப்பு பாலத்தில் இராணுவ வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி பாலத்திற்கு கீழே நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தினரை...
ஈ – தக்சலாவ வேலைத்திட்டத்தின் கீழ் எல்.எம்.எஸ் (L.M.S) முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்நிலைக் கல்வியை வழங்குவதற்கான திட்டம் இன்று ஆரம்பமாகின்றது. உத்தேச இத்திட்டத்தின் முதற்கட்டமாக 20 பாடசாலைகளில் ஆரம்பமாகி, எதிர்காலத்தில் 200 பாடசாலைகளுக்கு...
நாட்டில் 7 இலட்சத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளுக்கான அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மூவாயிரத்திற்கும் அதிகமான பாடசாலைகளில் ஒன்லைன் கல்வி வசதிகள் இல்லை எனவும் கல்வி அமைச்சின்...