உலகம்
தமிழகத்தில் 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 2 ஆம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய திகதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஒக்டோபர் 6 அம் திகதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது.
14 ஆயிரத்து 662 பதவியிடங்களுக்கு நடந்த இந்த தேர்தலில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
வாக்குபெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் 74 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 2 ஆம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.