ஜப்பானின் டோக்கியோவை பாதித்த ஆம்பில் புயலின் வேகம் அதிகரிக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அடுத்த 12 மணித்தியாலங்களில் புயலின் வேகம் மணிக்கு 212 கிலோமீற்றராக அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜப்பானில் இசுமி நகரின்...
கடும் மழை காரணமாக கொழும்பில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். காலி வீதி உட்பட கொழும்பின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. வீதிகளில் நீண்ட தூரம் வாகனங்கள் காத்திருக்க...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் ஆர். எம்.சோபித ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார்.மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக ஆர்.எம்.சோஹித ராஜகருணா இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்...
l.p.l. போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஊக்கமருந்து பயன்பாடு தொடர்பான இவ்வாறான அறிக்கை கிரிக்கெட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் அமைப்பின் பேச்சாளர்...
வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரக்கம்பி தாக்கியதில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (16) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது காணியின் பின்புறத்தில் குறித்த இளைஞர் சடலமாக...
வவுனியா – செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை குறித்த வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன்,...
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டின் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்றுடன் (16) நிறைவடைகிறது. இதற்கமைய அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில்...
சீனத் தூதுவர் கீ சென்ஹொங் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு சுமார் ஆயிரத்து 500 மில்லியன் ரூபா பெறுமதியான வலைகள் அன்பளிப்பு...
இரத்மலானை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் இயங்குதளம் திடீரென செயலிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் (14 ஆம் திகதி) முதல் நேற்று காலை (15 ஆம் திகதி) வரையில் சுமார் 12 மணிநேரம் செயலிழந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.
நாட்டில் சில வகை மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.தட்டுப்பாடு நிலவும் சில வகை மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜீ.வீரசூரிய தெரிவித்துள்ளார்....