உலகம்
ஜப்பானில் ஆம்பில் புயல்!
ஜப்பானின் டோக்கியோவை பாதித்த ஆம்பில் புயலின் வேகம் அதிகரிக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அடுத்த 12 மணித்தியாலங்களில் புயலின் வேகம் மணிக்கு 212 கிலோமீற்றராக அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜப்பானில் இசுமி நகரின் கரையோர பகுதியில் வசிக்கும் சுமார் 17,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறித்த பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதில் இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.