கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தும் வெற்றிகரமான நடவடிக்கைகள் தொடர்பான நிலைமை குறித்து பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு விளக்கினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்தல், கைதிகளாகவுள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்தல் மற்றும் காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் சபை போன்ற சுயாதீன நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற முக்கிய பிரச்சனைகள் தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஆகியன ஒத்துழைப்புடன் செயற்படுவதனை சுட்டிக்காட்டி, 2009 மே மாதத்தில் மோதல் முடிவுக்கு வந்ததன் பின்னர், எஞ்சிய விடயங்களைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடைமுறைகள் மற்றும் உறுதியான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பீரிஸ் வெளியுறவு அமைச்சருக்கு விளக்கினார். பல முனைகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் முயற்சிகள் தொடர்வதாகவும் அமைச்சர் பீரிஸ் மேலும் குறிப்பிட்டார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் பல்வேறு பகுதிகளில் முன்னேறுதற்காக வலுவான அரசியல் விருப்பம் இருப்பதாக வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.
நியூயோர்க்கில் அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சர் மாரிஸ் பெய்னைச் சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பரந்த அளவிலான பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினார். அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசனின் வாழ்த்துக்களை இலங்கையின் வெளிநாட்டு அமைச்சரிடம் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர் பெய்ன், இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்ட கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளில் பிரதமர் தனிப்பட்ட முறையில் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார். தொழிற்கல்வியில் அவுஸ்திரேலியாவின் அனுபவத்தைக் குறிப்பிட்ட அமைச்சர்பீரிஸ், இந்தப் பகுதியில் உதவிகளைப் பெற்றுக் கொள்வதில் இலங்கை மிகுந்த ஆர்வம் காட்டுவதாகக் குறிப்பிட்டார். ஆட்கடத்தல் தொடர்பாக குறிப்பிடுகையில், இது ஒரு மனிதாபிமான துயரம் என்றும், இந்த சட்டவிரோத நடவடிக்கையைத் தடுப்பதில் இலங்கை அரசாங்கம் கணிசமான பங்கைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியிலும் நல்லிணக்கத்திலும் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் அமைச்சர் பெய்னிடம் தெரிவித்தார். காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தொடர்பான முன்னேற்றங்கள், தற்போதைய நிலவரத்தை மதிப்பிடுவதற்காக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தலைமையில் ஆணைக்குழுவொன்றை நியமித்தல் மற்றும் செயன்முறையை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளை அடையாளம் காணுதல் போன்றன குறித்தும் அவர் விரிவாக விவரித்தார். உள்ளூர் நிறுவனங்கள் அவற்றின் ஆணைகளை நிறைவேற்றுவதற்கான இடத்தையும் வாய்ப்பையும் அளிப்பது அவசியம் என்றும், இந்தப் பணியை மீறும் தற்காலிக வெளிப்புறப் பொறிமுறையொன்றை நிறுவுவது தேவையற்றதும், தீங்கு விளைவிக்கவல்லதும் ஆகும் என்றும் வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார். ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளுக்கு முரணான வகையில், இலங்கையைத் தேர்ந்தெடுத்து இலக்கு வைக்கும் ஒரு பொறிமுறையைக் கொண்டிருப்பது முதிர்ச்சியற்றதும், பொருத்தமற்றதுமாகும். அவுஸ்திரேலியாவில் மிகவும் அருமையான மற்றும் குறிப்பிடத்தக்க புலம்பெயர்ந்தோர் இருப்பதாக அமைச்சர் பெய்ன் குறிப்பிட்டார். அமைச்சர் பீரிஸால் கோடிட்டுக் காட்டப்பட்ட பகுதிகளில், குறிப்பாக உளவுத்துறைப் பகிர்வு மற்றும் கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்பை அவர் வரவேற்றார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையேயான அன்பான மற்றும் நட்புறவான உறவை மேலும் மேம்படுத்துவதற்காக நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
எமது அரசியலமைப்பு மற்றும் சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க, மனித உரிமை முறைமையினால் கட்டளையிடப்பட்டுள்ள இந்த சபை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடனான எமது வலுவான மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை மீண்டும் வலியுறுத்துவதன் மூலம் எனது உரையை...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது ‘நில-இயல்’ கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று மாலை ஆரம்பமானது. எதிர்வரும் எட்டாம் திகதி வரை இந்த கூட்டத் தொடர் இடம்பெறும். 40க்கும் மேற்பட்ட நாடுகளின் மனித உரிமை...
அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்னெடுக்கப்படும் பிரசாரத்தில் எந்தவித உண்மையும் இல்லை என்று அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஒரு சில வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கி போலியான உணவுத் பொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக அமைச்சர்...
ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் ஹம்டியை வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் வைத்து செப்டம்பர் 02ஆந் திகதி மரியாதை நிமித்தமாக வரவேற்றார் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் தேவைகளின் பின்னணியில் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாட்டிற்கான ஐ.நா. குழு ஆகியவற்றுக்கு இடையேயான ஆக்கபூர்வமான மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்காக ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்தார். கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் தற்போதைய முயற்சிகள் மற்றும் இது தொடர்பாக எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு விளக்கினார். உலக சுகாதார தாபனம் மற்றும் யுனிசெஃப் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளையும், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட உதவிகளையும் அவர் மேமலும் பாராட்டினார். அமைதி, நீதி மற்றும் நிறுவனங்களைக் கையாளும் நிலையான அபிவிருத்தி இலக்கு 16 உட்பட மனித உரிமைகள் மீதான உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமான முன்னேற்றம் குறித்தும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் விளக்கினார். ஐ.நா.வுடனான அடுத்த 5 வருடங்களுக்கான ஒத்துழைப்புடன் இலங்கையின் முன்னுரிமைகளை உள்ளடக்கிய நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்பு 2023- 2027 ன் கீழ் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையே தயாராகி வரும் செயன்முறை குறித்து ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அமைச்சருக்கு விளக்கினார். இது 2030 இல் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நோக்கிய ஐக்கிய நாடுகள் நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்பின் இறுதி சுழற்சியாகும். அமைதி மற்றும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளின் அனைத்து அம்சங்களிலும் நாட்டிற்கான ஐ.நா. குழுவின் ஒத்துழைப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார். வெளிநாட்டு அமைச்சு
ஏப்ரல் 21 தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டில் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் செயற்பாட்டில் குழுவொன்று இயங்கி வருவதாக வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்...
இலங்கைக்கான கொரியக் குடியரசின் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங், புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை நேற்று (24) வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். வெளிநாட்டு அமைச்சரின் புதிய நியமனத்திற்காக தனது...
2020 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் “2020...
தற்போதைய நிலைமையில் எதிர்வரும் செப்டேம்பர் மாத முதல் வாரத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதில் நிச்சயமற்ற நிலை நிலவுவதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். சுகாதார...