18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் நவம்பர் மாதம் முடிவடைவதற்கு முன்னர் தடுப்பூசியேற்ற முடியும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கியுபத் தூதுவர் அன்ட்ரெஸ் கரிடொவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இந்த விடயத்தைச்...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற கொரோனா தடுப்பு தேசிய செயலணியுடனான கலந்துரையாடலில் இந்த...
ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பனி மூட்டம் நிலவி வருகிறது. வளைவுகள் நிறைந்த இந்த வீதிகள் மழையுடன் வழுக்கும் நிலை காணப்படுவதால் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகன சாரதிகள்...
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி...
ஆசிரியர்கள்- அதிபர்கள் பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் சாதகமானதாக அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்ட பின்னர் குறித்த...
தற்போது அமுலில் உள்ள ‘தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை’ தொடர்ந்தும் நீடிப்பது குறித்து இன்று (27) தீர்மானிக்கப்படவுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டம்...
நாட்டை மேலும் சில தினங்களுக்கு முடக்குமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தினார். அரசாங்கத்தினால் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கம் போதாது எனவும் மருத்துவ ஆலோசனைக்கு அமைய மேலும் இரண்டு...
வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக 2021 ஆகஸ்ட் 25ஆந் திகதியாகிய இன்றை தினம் சநதித்த அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி, அவுஸ்திரேலியாவுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினார். பல முனைகளில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் நல்கிய உதவியைப் பாராட்டிய வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் குறிப்பாக, கடல் மார்க்கமான ஒழுங்கற்ற இடம்பெயர்வு, கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுதல், கல்வி, தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி, பொருளாதார மற்றும் முதலீட்டுத் துறைகளில் அவுஸ்திரேலியாவால் ஈடுசெய்யப்பட்ட ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தை வலியுறுத்தினார். வெளிநாட்டு அமைச்சரின் நியமனத்திற்காக தனது பாராட்டுக்களைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர் ஹொலி, சமூகப் பொருளாதார அபிவிருத்தி செயற்பாட்டில் இலங்கைக்கு உதவுவதற்கு அவுஸ்திரேலியா தயாராக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார். இந்து சமுத்திரத்தின் அண்டை நாடுகளாக இருப்பதால், எதிர்கால கடல் பேரழிவுகளைத் தடுத்தல் மற்றும் சர்வதேச மற்றும் பிராந்திய மன்றங்களிலான ஒத்துழைப்பு ஆகியவற்றில் கடல்சார் துறையில் நெருக்கமான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் கண்டறிந்தனர். இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையே இராஜதந்திர உறவுகளை நிறுவியதன் 75வது ஆண்டு நிறைவை 2022ஆம் ஆண்டு கொண்டாடுவதற்கு வெளிநாட்டு அமைச்சரும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் ஒப்புக் கொண்டனர். வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். வெளிநாட்டு அமைச்சு
சைனோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது என்ற ஒரு நிலை இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஸ்வீடன், ஹங்கேரியா, கனடா, நெதர்லாந்து, ஈராக், ஜோர்தான், மாலைத்தீவு, வடகொரியா, கட்டார், பாகிஸ்தான், இந்தோனேசியா...
கொவிட் வைரசு பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள ‘தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை’ தொடர்ந்தும் நீடிப்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பு...