உள்நாட்டு செய்தி
பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க தீர்மானம்
பல்கலைக்கழகங்களை கட்டம் கட்டமாக மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, பரீட்சைகள் மற்றும் செயன்முறை பயிற்சி நடவடிக்கைகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது குறித்து இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.