பிரதி சபாநாயகர் தெரிவுக்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய-148 இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் -65 நிராகரிக்கப்பட்டவை- 03 வாக்களித்தாத உறுப்பினர்கள்- 8
இன்று நள்ளிரவு முதல் பஸ் சேவைகளை முன்னெடுப்பதிலிருந்து இருந்து விலகி செயற்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 1,102 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 17,405 டெங்கு...
இலங்கை கொண்டுள்ள வெளிநாட்டு நாணயத்தில், தற்பொழுது பயன்படுத்தக்கூடிய தொகை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்திருப்பதாக நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிதி அமைச்சர் தலைமையிலான அதிகாரிகள்...
பிரதமர் பதவி விலகுவதால் மட்டும் இலங்கையில் எந்தப் பயனும் ஏற்பட்டு விடாது, அரசின் கொள்கைகள் மாற வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். வரும் மாதங்களில் நாட்டில்...
பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 10 ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக பல காணிகள் இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்துக்கு பிரதமர் அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிற்கு பிரதமர் பதவியை வழங்க தயார் என பிரதமர் அறிவிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தகவல்கள்...
நாடளாவிய ரீதியில் இன்று (04) 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இரண்டு பிரதான வலயங்களில் காலை 09.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை...
குறுகிய அரசியல் நலன்களுக்காக மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தில் எதிர்வரும் 06ஆம் திகதி நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் வேலை நிறுத்தத்திற்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லை என பல அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்....